h1

A Day’s Journey in Chennai

September 25, 2008

I would like to share my day-to-day traffic experience in Chennai. For people like me originally from a tier two city like Pondicherry, Chennai looks different and complex in terms of cost of living, traffic mass and what not? The list goes on. Out of these, traffic is one of the most important aspects which must be considered with utmost care by the traffic police and road transport department. Certainly, even you and I are responsible and should be helpful by at least abiding to the traffic rules.

Very recently on a Friday’s evening with a festive mood after a heavy rain Madharasapattinam roads were frozen with heavy traffic masses. The 60KM human chain agitation from Chennai to Chengalpattu too contributed generously. It took fairly three hours for me to reach my home in Guindy which is 10KM away from Kandhanchavadi (located in IT corridor-RajivGandhi Road). The wheels were inching forward and not even complete a rotation without brake; commuters were been restless because most of them were towards Central/Egmore station to celebrate the light festival with their parents and family in their lovely native place. Even I might have easily reached my native Pondicherry by that 3hrs time but this year we had already decided to celebrate Deepavali in Chennai itself. This incident may be most of your experience too and this has got me to recollect how difficult it was for me to reach Tidel Park from Guindy approximately a year before, because that day the bus was over crowded and running aslant at an ~15degree angle from its head and stood in IIT Madras near flyover over 25minutes due to heavy traffic jam. The same day I wrote that experience as follows…

அன்றாட அலுவல் செலவு

நீலத்திரை மீது சிவந்தமஞ்சள் துளையிட்டு
வலம் வரும் அன்பு அக்னி கதிரவனே!
திருப்பள்ளி எழுந்துவிட்டோம் புதுக்குளியல் முடிந்தும்போச்சு
இரும்பு பெட்டி அழித்த சுருக்கங்கள்; மிடுக்காய் உடை அணிந்தோம்
கனவு துகள்கள் அப்பிய முகம் கொண்டோம்
அம்மாவோ நாங்களோ சமைத்த சுவையான உணவுப்பேழை ஏந்தி
வீறுநடைபோட்டு வந்தோம்… தெரு கோடி தாண்டியதுமே
ஜனசமுத்திரம்; புகைத்தபடி ஊர்ந்து செல்லும் வாகணங்கள்
இந்த ஜனசமுத்திரத்தில் நீந்தி செல்லும் மீன் போன்ற மனநிலை
எட்டுத்திக்கும் முழிதுகொண்ட வாகனத்தின் குறட்டைஒலி – இரைச்சல்
மாநகர பேருந்தை தேடியபடி google-ஆகும் விழிகள்
அப்பிய கனவுதுகள்கள் எல்லாம் ice cream போல் கரையுது வியர்வையிலே
அழிந்த சட்டை சுருக்கமெல்லாம் புது உருவம் பெறுகிறதே
பேருந்தின் சக தோழர் தோழியர் நெரிசலிலே
மாநகர பேருந்தின் பதினைந்து கோண சாய்ந்த சாகச ஓட்டம்
நெடுநேரம் சிவப்பினிலே நிற்கும் போக்குவரத்து சமிக்கை விளக்குகள்
எண்ணி முடிக்க முடியாத கவச நண்பர்கள் accelerator திருகியபடி
பள்ளி செல்லும் தம்பிகூட Tom and Jerry பெட்டியிலிருந்து எடுத்த
biscuit-ஐ தன் breakfast-ஐ வேகமாய் முடித்துவிட்டான் auto-விலே
பச்சை விளக்கு ஒளித்ததுமே எல்லோர் மனதிலுமே ஒரு வேகம்
கால்களும் கைகளும் மனக்கட்டளையை நிறைவேற்றி வேகத்தைக்கூட்டும்
தினசரி அலுவலை நிறைவேற்றும் முன்னரே ஒரு மாபெரும்
போராட்டம் இம்மாநகர சாலையிலே…
ஒன்றுபட்ட இவ்வனுபவம் உமதுமாய் இருக்கலாம்…
தோழர் தோழியரே! போக்குவரத்து நெரிசல்…
copyright-ஓ patent-ஓ பெறாமல் அணைவரின் அன்றாட சொத்தாய்
மாற்றபட்டிருக்கும் இவ்வாட்சியாளர்தம் திட்டமிடப்படாத
நவயுக கார்ல் மார்க்ஸ்-இன் புதிய சமதர்ம தத்துவமிது!